"சத்யன் நேரமாச்சுப்பா."
"இதோ நான் போய் வண்டி எடுக்கறேன் வாங்கம்மா."
"பெரிய வண்டியே எடுத்துக்கோப்பா, மண்டபத்துல இருந்து யாராவது வீட்டுக்கு தங்க வந்தாக் கூட சவுகர்யமா இருக்கும்."
"சரிமா இன்னோவா எடுத்துக்கறேன்." திவ்யாவுடன் "மாடசாமி" என்று தோட்டக்காரனை அழைத்துக் கொண்டே காரை நோக்கி வந்தார் ஜானகியம்மா.
"அம்மா கூப்டிங்களா?"
"ஆமாம்பா வீட்டப் பார்த்துக்கோ, எப்பவும் போல ஒன்பது மணிக்கு கேஜ்ல இருந்து நாய் ரெண்டையும் வெளிய விட்ரு,"
"சரிங்கம்மா."
"நாங்க வர்றதுக்கு பத்துக்கு மேல கூட ஆகலாம், இப்பவே சாப்பிட்டு வந்து இங்கேயே இரு."
"அப்பவே சாப்பிடாச்சுமா" என்று அசடு வழிந்தான்.
"அட பொண்டாட்டி கூட சண்டையெல்லாம் சரியாயிடுச்சு போல" என்று அவர் கேட்டதற்கு, அதே அசட்டுச் சிரிப்புடன் தலையைச் சொறிந்தான்.
"சரி ரொம்ப வெக்கப்படாத, நாங்க கிளம்பறோம்."
"சரிங்கம்மா" என்று அவன் சொல்வதற்குள் கார் புறப்பட்டு விட்டிருந்தது.
"திவ்யா நீ முன்னாடி உக்காந்திருக்கலாமில்ல."
"நீங்க உக்காருவீங்களோன்னு நான் பின்னாடி ஏறிட்டேன் பெரியம்மா."
"எப்படியோ என்னை டிரைவர் ஆக்கறதுல உங்களுக்கெல்லாம் சந்தோஷம்."
"நான் ஓட்டவாண்ணா?"
"அது சரி, அதுக்கு நானே டிரைவரா இருந்துக்குவேன்."
"ஏம்பா அவ நல்லாதானே ஓட்டுவா."
"சீக்கிரம் போய்ச் சேரணும். இப்பவே நாம இன்னும் வரலைன்னு எல்லாரும் பாத்துட்டிருப்பாங்க."
"ஆமாம், சீக்கிரம் போப்பா."
"சரிமா, என்ன பெருமூச்செல்லாம் பலமா இருக்கு?"
"என்னத்த சொல்றதுப்பா, உன்ன விட அஞ்சு வயசு சின்னவன் அவன் கல்யாணத்துக்குத்தான் போயிட்டிருக்கோம்."
"நல்ல வேளை சொன்னீங்க, நான் போய் அது யாருன்னு தெரியாம முழிச்சிருப்பேன்."
"நான் சீரியஸாய் பேசறது உனக்குக் கிண்டலா இருக்காப்பா."
"அச்சச்சோ கவலைப்படாம வாங்கம்மா, நானென்னவோ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன மாதிரி."
"என்னப்பா நீதானா பேசறது?"
"ரொம்ப சந்தோஷப்படறீங்களே, எனக்கேத்த மாதிரி பொண்ணு கிடைக்கணும்மா."
"கிடைச்சுட்டா அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்."
"அதுல என்ன சந்தேகம்?"
"அண்ணா பெரியம்மா கைவசம் நிறைய ஜாதகம் வெச்சிருக்காங்க."
"ஆமாம்மா, அவன் மட்டும் சொன்ன மாதிரி நடந்துக்கிட்டாப் போதும்.".
"மண்டபம் வந்துடுச்சு ரெண்டு பேரும் இறங்கிக் கோங்க, நான் போய் காரை வரிசைல போட்டுட்டு வந்துடறேன்."
"என்னப்பா நீ சொன்னத நம்பலாம் தானே" என்று காரை விட்டு இறங்கிக் கொண்டே மகனைப் பார்த்தார் ஜானகி.
"சத்தியம் வேணும்னாப் பண்ணட்டுமாமா, அதான் என் பேரே சத்யனாச்சே."
"அதானே நீ சொன்னா சரிதான்."
"அச்சச்சோ விட்டா இப்பவே ஒரு பொண்ணப் பார்த்து கட்றா தாலியன்னு சொல்லிடுவாங்க போலிருக்கே."
"பின்ன இப்பத்தான் யாரோ கல்யாணத்துக்குத் தயார்னு சொன்னாங்க, பொய்யா?"
"அட அருமைத் தங்கையே நீயுமாம்மா, போம்மா போ."
"வாங்கண்ணா பொண்ணு மண்டபத்துக்குள்ளயே கூட ரெடியா இருக்கலாம்," என்று சிரித்துக் கொண்டே தன் பெரியம்மாவைப் பின் தொடர்ந்தாள் திவ்யா.
Title : எனதுயிரும் நீயல்லவோ..!
EAN : 9798231792269
Publisher : Sathya Rajkumar
Ebook எனதுயிரும் நீயல்லவோ..! is in the ePub format.
Would you like to read on an e-reader from another brand? Discover Our guide
It may not be available for sale in your country, but exclusively for sale from an account domiciled in France.
If the redirection does not happen automatically, click on this link.
Log in
My account