S. Suresh
பொருள் விளங்கு சொல் தேடும் யதார்த்த கவிஞர்
Avid reader of Tamil literature born in a family with Tamil literary background, with interest in street plays and theatre. Designed and published small magazines. Has a unique style of communicating views on issues.
dashboard
Serie
Rali & Thamizh Inbam
|
அன்னை பராசக்தியின் அழகு வெள்ளத்தை 'ஸௌந்தர்யலஹரி' என்று ஆதி சங்கரர் பாடினார். 'லஹரி' என்றால் வெள்ளம்.
இதுவோ "கந்த லஹரி".
கந்தக் கடவுளின் அன்பும், ஆற்றலும், அருளும், பெருமையும் வெள்ளமென இந்நாள் கவிஞரான திரு, சுரேஷின் கவிதைகளில் பாய்கிறது.
முருகன் என்றாலே அழகன். எனவே இதுவும் அழகு வெள்ளமே..
கந்த லஹரி - கந்தன் எனும் மந்திரத்தை கவினுரு தமிழால் புனைந்து நக்கீரர் தமிழ்க் கடவுளின் மகிமையை "ஆற்றுப் படுத்தி" (வழிப்படுத்தி) ஆறு பகுதிகளாக "திருமுருகாற்றுப் படை ஈந்தது போல், கச்சியப்ப சிவாசார்யர் இயற்றிக் குமர கோட்டத்தில் அரங்கேற்றிய கந்த புராணம் எனும் கந்தன் சரிதையை கவிஞர் மாத்திரை (capsule) வடிவத்தில் அளித்துள்ளார்.
சரவணப் பொய்கையில் உதித்தெழுந்த அறுமுகங்களைப் போலவே கவிஞர் தனது கவிதைப் பொய்கையில் பிரவகித்து எழுந்த வரிகளைச் சேர்த்தணைத்து கவிதையாக்கித் தந்திருக்கிறார்.
இந்தக் கவிதைத் தொகுப்பில் திரு, சுரேஷ் கந்த லஹரியுடன் தனது மற்ற கவிதைகளான 'ஆடியின் நாயகி', 'சிவனார் அமுதம்', 'திருவடிப் பாவை', 'ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா பஞ்சகம்' ஆகியவற்றையும் இணைத்துத் தந்திருக்கிறார்.
சரவணப் பொய்கையில் வந்த குஹனில் துவங்கி மடை திறந்த வெள்ளமெனப் பெருகி வரும் அன்னையின் அன்பு மழையில் நனைந்து, கடல் வண்ணனைக் கண் குளிரக் கண்டு, கங்கை சிரம் கொண்டானைக் கொண்டாடி, வைகை நதி பெருகக் காரணமாய் அமைந்த மல்லிகை நாயகியின் திருமணத்தில் நம்மை மகிழ்வித்து இறுதியில் மோன குருவாம் காஞ்சி முனிவரின் ஞான ஊற்றில் நம்மைத் திளைக்க வைத்திருக்கிறார்.
Título : Kanda Lahari
EAN : 9781386677956
Editorial : Rali Panchanatham
El libro electrónico Kanda Lahari está en formato ePub
¿Quieres leer en un eReader de otra marca? Sigue nuestra guía.
Puede que no esté disponible para la venta en tu país, sino sólo para la venta desde una cuenta en Francia.
Si la redirección no se produce automáticamente, haz clic en este enlace.
Conectarme
Mi cuenta